உலக முதலீட்டாளர் மாநாடு : ரூ. 3 லட்சத்து 431 கோடி முதலீடு

உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பல்வேறு துறைகளில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டுள்ளது. சென்னை, நந்தம்பாக்கத்தில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் 3 லட்சத்து 431 கோடி ரூபாய் முதலீடு கையெழுத்தாகியுள்ளது. இதன் மூலம் 10 லட்சத்து 56 ஆயிரத்து 141 இளைஞர்கள் வேலை வாய்ப்பு பெறவுள்ளனர். பெரிய நிறுவனங்கள் 146 ஒப்பந்தங்களில் 1 லட்சத்து 54 ஆயிரத்து 648 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 4 லட்சத்து 73 ஆயிரத்து 871 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். வீட்டு வசதித்துறை மூலம் 70 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ள நிலையில், 57 ஆயிரத்து 381 கோடி ரூபாய் முதலீடு ஈர்க்கப்பட்டு, 92 ஆயிரத்து 526 பேர் வேலை வாய்ப்பை பெருகின்றனர்.

சிறுகுறு மற்றும் நடுத்தர வணிக நிறுவனங்கள் 12 ஆயிரத்து 360 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இதன் மூலம் 32 ஆயிரத்து 206 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 2 லட்சத்து 90 ஆயிரத்து 57 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும். எரிசக்தி துறை முலம் 15 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 40 ஆயிரத்து 700 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 14 ஆயிரத்து 235 நபர்கள் வேலைவாய்ப்பு பெறுவர். தகவல்தொழில் நுட்பத்துறை மூலம் 10 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 11 ஆயிரத்து 674 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ஒரு லட்சத்து 66 ஆயிரத்து 171 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும்.

உயர் கல்வித்துறையில் 50 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், ஆயிரத்து 13 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, 6 ஆயிரத்து 797 பேர் வேலைவாய்ப்பு பெறுவர். சுற்றுலாத்துறை மூலம் 8 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 642 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு, ஆயிரத்து 284 பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள். பள்ளிக் கல்வித்துறை மூலம் 3 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி 157 முதலீடு ஈர்க்கப்பட்டு, ஆயிரத்து 200 பேர் வேலைவாய்ப்பு பெறுவர்.

வேளாண்துறை மூலம், 2 ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், 2 ஆயிரத்து 10 கோடி முதலீடு ஈர்க்கப்பட்டு அதன் மூலம் 10 ஆயிரம் பேர் வேலை வாய்ப்பு பெறுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version