சீனாவுக்கு ஆதரவாக செயல்படும் உலக சுகாதார நிறுவனம்-டிரம்ப்!

உலக சுகாதார அமைப்புக்கு வழங்குப்படும் நிதியுதவி நிறுத்த திட்டமிட்டுள்ளதாக  அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார்.  வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிபர் டிரம்ப், உலக சுகாதார அமைப்பிற்கு அமெரிக்கா பெருந்தொகையை செலுத்துவதாகவும், ஆனால் அந்த அமைப்பு சீனாவிற்கு ஆதரவாக செயல்படுவதாகவும் குற்றஞ்சாட்டினார். உலக சுகாதார அமைப்பு சீனாவுக்கு ஆதரவாக செயல்படுவதால் அதற்கு அளிக்கப்படும் நிதியை நிறுத்த உள்ளதாக அதிபர் ட்ரம்ப் எச்சரித்தார். கொரோனா வைரஸ் குறித்து உலக சுகாதார அமைப்புக்கு நிறைய தகவல்கள் தெரியும் என்றும், ஆனால் அவர்கள் எதையும் வெளிப்படையாக தெரிவிக்காததால் சீனாவை மையமாக கொண்டு இயங்குகிறதோ என்ற சந்தேகம் எழுவதாகவும் அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார். எனினும், கொரோனா பாதிப்பில் உலகமே சிக்கித் தவிக்கும் இந்த சூழலில் உலக சுகாதார அமைப்புக்கு எதிரான கடினமான முடிவை எடுக்க மாட்டேன் என்றும் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

Exit mobile version