அடுத்த வார இறுதிக்குள், உலகளவில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என உலக சுகாதார அமைப்பு திடுக்கிடும் தகவல் வெளியிட்டுள்ளது.
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 94 லட்சத்தை கடந்துள்ள நிலையில், பல்வேறு நாடுகளும் நோய் பரவலை கட்டுப்படுத்த போராடி வருகிறது. இந்த நிலையில், அடுத்த வார இறுதிக்குள், உலகளவில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை ஒரு கோடியை எட்டும் என்று, உலக சுகாதார அமைப்பின் இயக்குநர் டெட்ரோஸ் அதானோம் தெரிவித்துள்ளார். கொரோனா நோய் தொற்றுக்கான தடுப்பூசிகள் மற்றும் சிகிச்சை முறைகளுக்கான ஆய்வுகள் நடைபெற்று வருவதை சுட்டிக்காட்டிய அவர், தற்போது உள்ள சூழலில், இருக்கும் கருவிகள் மற்றும் சிகிச்சை முறைகளை கொண்டு நோய் பரவலை கட்டுப்படுத்த வேண்டிய நிலையில் உலக நாடுகள் உள்ளதாக தெரிவித்தார்.