கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள 2 புள்ளி 30 லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், கொரோனா நோய் தொற்றை எதிர்கொள்ள அடுத்த 12 மாதங்களுக்கு 2 புள்ளி 30 லட்சம் கோடி நிதி தேவைப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள தற்போது நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ள நிலையில், 13 புள்ளி 7 பில்லியன் டாலர்கள் அதாவது ஒரு லட்சம் கோடி ரூபாய்க்கு மேல், உடனடியாக தேவைப்படுவதாக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் ஆய்வின் படி தற்போது நிதி தேவையானது, கொரோனாவால் உலக பொருளாதாரம் ஒவ்வொரு மாதமும் இழந்து வரும் தொகையில், பத்தில் ஒரு பங்கை விட குறைவானது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.