உணவின் உன்னதம் கூறும் உலக உணவு பாதுகாப்பு தினம்

 

உணவு பாதுகாப்பு தினம் என்பது விவசாயிகள், உணவு தயாரிப்பு நிறுவனம் மற்றும் நாட்டு மக்கள் ஆகிய 3 பிரிவினரும் கூடி இழுக்க வேண்டிய தேர். இதில் ஒருவர் முட்டைக்கட்டை இட்டால் கூட உணவெனும் தேர் ஆரோக்கியம் எனும் நிலை வந்து சேராது.இன்றைய இயந்திர வாழ்வியல் முறையில் 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளில் 7 விழுக்காடு குழந்தைகள் உணவு உபாதைகளால் அவதியுற்று வருவதாக அதிர்ச்சி தகவலை கோடிட்டு காட்டுகிறது ஒரு புள்ளிவிவரம்.

ஆரோக்கியம் என்பதை அடகு வைத்து விட்டு வாழும் இன்றைய இளைய தலைமுறையினர், பாதுகாப்பான உணவு எது என்பதை அறிந்து சாப்பிடுவது அவசியம். உலக முழுவதும் இருக்கும் மக்கள் பாஸ்ட்புட் உணவுகளை மறந்து தங்களது பாரம்பரிய உணவுகளிடம் சரணடைந்தாலே பாதி பிரச்னை முடிந்த மாதிரி என்கிறார்கள் இயற்கை மருத்துவர்கள்.

தமிழர்களைப் பொறுத்தவரை ஓர் ஆண்டில் ஏற்படக்கூடிய கால மாற்றத்துக்கு ஏற்ப நமது உணவு பழக்க வழக்கங்களை பிரித்து வகைப்படுத்தியுள்ளார்கள் நம் முன்னோர்கள். கோடை கால உணவு வகைகள், மழைக்கால உணவு வகைகள், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள் என அவரவருக்கு ஏற்றார் போல் நமது தமிழர் பாரம்பரிய உணவு வகைகள் நம் தமிழ் மரபில் உருவாக்கப்பட்டுள்ளன.

உணவு பாதுகாப்பு தினம் என்பதை ஆண்டுதோறும் கொண்டாப்படும் ஆயிரம் அரசு விழாக்களில் அதுவும் ஒரு விழா என்று பாராமல் இந்த நாள் நமக்கான நாள். நமக்கு பின் ஒரு ஆரோக்கியமான தலைமுறையை உருவாக்க முன்னெடுக்க வேண்டிய நாள். என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

நியூஸ் ஜெ. செய்திகளுக்காக ஒளிப்பதிவாளர் யோசேப்புடன், செய்தியாளர் கோபாலகிருஷ்ணன்.

Exit mobile version