நாளை நடைபெறவுள்ள உலக புகழ் பெற்ற பூரம் திருவிழா

திருச்சூர் பூரம் திருவிழாவை ஒட்டி யானைகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் யானை பங்கேற்றது.

30 நாட்கள் நடைபெறும் திருச்சூர் பூரம் திருவிழாவில் யானைகள் அணி வகுப்பு நிகழ்ச்சி நாளை நடைபெறவுள்ளது. இதனையொட்டி, யானைகளுக்கான ஒத்திகை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் பங்கேற்க தெச்சிக்கோட்டுகாவு ராமச்சந்திரன் யானை வடக்கும் நத்தம் கோயிலுக்கு வருகை தந்தது. தங்க ஜரிகையால் ஆன பட்டகத்தை அணிந்து வந்த யானையை கோயில் வளாகத்தில் குவிந்திருந்த பொதுமக்கள் உற்சாகத்தோடு வரவேற்றனர். நாளை நடைபெறவுள்ள அணி வகுப்பு நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ள அனைத்து யானைகளும் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டன. அசம்பாவிதங்கள் நடைபெறாமல் தடுக்க மூன்று குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ள நிலையில், மதம் பிடித்த யானைகளை கட்டுப்படுத்த தேவையான உபகரணங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

Exit mobile version