உல்லாச உலகம் பகுதியில் இன்று Burkina Faso மற்றும் Tajikistan பற்றிய ஆச்சர்ய தகவல்.Burkina Faso நாடு மேற்கு ஆப்பிரிக்காவில் உள்ளது. 2 லட்சத்து 74 ஆயிரம் சதுர கி.மீ. பரப்புகொண்டுள்ள இத்தேசத்தில், 2 கோடி பேர் வசிக்கிறார்கள்.. பிரான்சிடம் இருந்து 1960 ல் விடுதலை பெற்ற இந்நாடு , வழக்கமான ஆப்பிரிக்க நாடாக பின்தங்கியே இருக்கிறது.
உலகின் ஏழை நாடுகளில் ஒன்றாக இருக்கும் Burkina Faso வில், பாதிக்கும் மேற்பட்டோர் வறுமைக்கோட்டிற்கு கீழ் இருக்கிறார்கள்.
இஸ்லாமியர்கள் 60 சதவிகிதமும், கிறித்துவர்கள் 24 சதவிகிதமும், உள்நாட்டு மதத்தை பின்பற்றுவோர் 15 சதவிகிதமும் உள்ளனர். நாட்டின் நிலப்பரப்பில் வடபகுதி பாலைவனமாகவும், தென் பகுதி வளமையாகவும் உள்ளது. இந்நாட்டவர்கள் சுற்றுச்சூழலை அதிக அளவில் மாசுபடுத்துவதாக குற்றச்சாட்டு இருக்கிறது. இங்கிருக்கும் Nazinga Reserve தான் ,உலகிலேயே அதிக எண்ணிக்கையில் யானைகளை பாதுகாக்கும் இடமாக திகழ்கிறது. அதோடு சிங்கம், குரங்குகள், நீர் யானைகள், பல வகையான மான்கள் பெரும் எண்ணிக்கையில் உள்ளன.
அடுத்ததாக நாம் பார்க்க உள்ள நாடு Tajikistan… ஆப்கானிஸ்தானின் கிழக்குப்பகுதியில் இருக்கும் அழகான நாடு இது.. சோவியத் பிடியில் இருந்த இந்நாடு 1991 ல் விடுதலை பெற்றது. வெறும் 92 லட்சம் பேர் வசிக்கும் குட்டி நாடாக இருந்தாலும், பொருளாதார ரீதியாக ஓரளவு வளர்ந்திருக்கிறது. நாட்டின் பாதிபொருளாதாரம், வெளிநாட்டுப்பணத்தையே நம்பி இருக்கிறது..
அதாவது அந்நாட்டினர் பெரும்பாலும் வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்ப்போராக இருக்கிறார்கள்.. குறிப்பாக ரஷ்யாவில் அதிக அளவில் வேலை செய்கிறார்கள். தஜிகிஸ்தானின் 50 சதவிகித வருவாய் இதை நம்பியே இருக்கிறது.
இங்கே 96 சதவிகிதம் பேர் இஸ்லாமியர்களாவும்., ஒன்றரை சதவிகிதம் பேர் மட்டுமே கிறித்துவர்களாகவும் உள்ளனர். நாட்டின் 90 சதவிகித நிலப்பகுதி மலைபிரதேசங்களாகவே உள்ளன. உலகின் மிகப்பெரிய சிகரங்கள் சில இந்நாட்டில் உள்ளன. இவை ஹிமய மலையின் தொடர்ச்சியே ஆகும்.. கிட்டத்தட்ட 900 நதிகள் ஓடி, தஜிகிஸ்தானை வளமாக்குகின்றன. சமீபகாலமாக தான் இந்நாட்டில், சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்து வருகிறது.. அழகான பெண்களை தாங்கி நிற்கும் தேசம் என்ற செல்ல பெயரும் தஜிகிஸ்தானுக்கு உண்டு.