தற்கால டிஜிட்டல் யுகத்தில், உணர்ச்சிகளை பகிர்ந்துகொள்ள , நமக்கு பெரிதும் உதவுபவை எமோஜிகள்… 21-ம் நூற்றாண்டின் அறிவியல் மொழியாக உருவெடுத்துள்ள எமோஜிக்களின் தினம் இன்று. எமோஜிக்கள் பிறந்தை கதையையும், வளர்ந்த கதையையும் பார்க்கலாம்..
புரியாத புதிர்களையும் புரிய வைக்கும், சொல்லமுடியாத வார்த்தைகளையும் வெளிபடுத்தும், அடக்கமுடியாத கோபத்தையும் எதிர்தரப்புக்கு பதிய வைக்கும் ஆற்றல் கொண்டது தான் எமோஜி. இன்றைய தினம் எமோஜிகள் தினமாக கொண்டாடப்படுகிறது. இந்த எமோஜியானது முதலில் ஜப்பானைச் சேர்ந்த எண்டிடி டொகொமோ ((NTT Docomo))என்ற நிறுவனத்தில் பணியாற்றிய ஷிகேடிகா குரிடா ((shigetaka kurita)) என்பவரால் 1998ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.
மக்கள் அன்றாடம் வெளிப்படுத்தும் 180 உணர்வுகளைப் பட்டியலிட்டு அவற்றுக்கான எமோஜிக்களை உருவாக்கினார் குரிடா. இப்போது இன்னும் பல நூறு எமோஜிக்கள் வந்துவிட்டன.
மொழி தேவையில்லை, பேசத்தேவையில்லை, நம்முடைய உணர்வுகளை எங்கோ இருக்கும் ஒருவருக்கு எமோஜி மூலம் கொண்டு சேர்த்து விடலாம் என்பதே எமோஜிக்களின் வெற்றியாக உள்ளது. காலத்தின் மாற்றத்திற்கு ஏற்றார் போல எமோஜிகளும் பல விதங்களில் வளர்ச்சியடைந்து கொண்டே செல்கிறது.
பத்தி பத்தியாக எழுதியும் புரிய வைக்க முடியாத விஷயங்களை ஒரே ஒரு எமோஜி புரிய வைத்துவிடுகிறது என்பது தான் அதன் அபார வளர்ச்சிக்கு காரணம். நேரத்தை மிச்சப்படுத்தும் என்பதால் இந்த வாட்சப், பேஸ்புக் யுகத்தில் தவிர்க்க முடியாத அங்கமாகி விட்டன இந்த எமோஜிகள்.