“ஆடை பாதி..ஆள் மீதி…..இந்த மாற்றியமைக்கப்பட்ட வரிகளில் தான் உடைகளுக்கு முக்கியத்துவம் தரும் இன்றைய உலகம் இயங்கிக் கொண்டிருக்கிறது.அந்த அளவு உடைக் கலாச்சாரம் முக்கியமானது.அந்த உடைகளில் பாரம்பரிய உடைகளுக்கு என்றுமே தனி பவுசு தான்.அதிலும் வேட்டிகளுக்கு இருக்கும் மதிப்பு ஒரு மவுசு தான். தமிழர்களின் பாரம்பரிய உடைகளில் ஒன்றானது வேட்டி. திருவிழாக்கள், குடும்ப விழாக்கள்,அரசியல் என எந்த ஒரு ஏரியாவை எடுத்தாலும் வேட்டி தான் பேமஸ்.4 முழம் , 8 முழம்,16 முழம்ன்னு ரகம் ரகம்மா கிடைக்குற வேஷ்டி..இன்னிக்கு பிறந்த குழந்தை வரைக்கும் உடுத்துற உடையா வந்தது தான் இதோட ஹைலைட்டு.வேஷ்டியை மடிச்சிக்கட்டி அப்படி நடந்து வரும்போதே ஊருக்குள்ள ஒரு தனி மரியாதை தான்.நம்ம அப்பா, தாத்தா காலத்துல இல்லை….சுதந்திரம் அடைவதற்கு முன்னாடில இருந்தே வேட்டி தான் மாஸ்.
இத்தகைய பாரம்பரிய உடையான வேட்டியை இளைஞர்களிடத்தில் ஊக்குவிக்கும் பொருட்டு யுனெஸ்கோ நிறுவனம் ஆண்டுதோறும் ஜனவரி 6ம் தேதியை சர்வதேச வேட்டிகள் தினமாக அறிவித்தது.இது உலக அரங்கில் வேட்டிக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரமாகும்.
உடையைக் கொண்டே ஒருத்தருடைய எண்ணங்களை நாம கண்டுபிடிச்சிடலாம். ஆனால் மேற்கத்திய தாக்கம், உலகமயமாக்கல்ன்னு நாம மாற மாற நம்முடைய அடையாளங்களை மறந்துட்டோம்.பல தரப்பட்ட கலாச்சாரத்தை ஃபாலோ பண்ற நாம் அனைவரும் முதலில் நம்முடைய பாரம்பரியங்களை தொடரலாம்.
இன்னிக்கு இருக்க டெக்னாலஜில ஒட்டிக்கிற வசதியுள்ள வேட்டி, பாக்கெட் உள்ள வேட்டின்னு வயசு வித்தியாசம் இல்லாம கிடைக்குது.இதனால் வேட்டிக் கட்டத் தெரியாது என மழுப்பி வந்த ஆண்களில் பலர் இப்பல்லாம் எந்த ஒரு விழா நாட்கள்ல கூட அதிகமா கட்டுற பழக்கத்தை பார்க்க முடியுது. தமிழ்நாடு அரசும் இதனை ஊக்குவிக்க பல்வேறு முயற்சிகளை எடுத்துக்கிட்டு வர்றது பாராட்டப்பட வேண்டிய ஒன்று.
நம்முடைய உணர்வுகள் மாதிரி தான் உடைகளும் …நாம் எப்படி நம்முடைய உணர்வுகளோட உரிமையை விட்டுக்கொடுக்க மாட்டமோ…அதே மாதிரி உடைகளோட உரிமையும் விட்டுக்கொடுக்க கூடாது.
வேட்டிகள் கட்டி இன்றைய வேட்டிகள் தினத்தை கொண்டாடுற ஒவ்வொருவருக்கும் வாழ்த்துக்கள்!