உலக மரணதண்டனை எதிர்ப்பு தினம் – சிறப்பு தொகுப்பு

ஒவ்வொரு வருடமும் அக்டோபர் 10ஆம் தேதியன்று, உலக மரணதண்டனை எதிர்ப்பு தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. 

இந்தியா உள்ளிட்ட சில நாடுகளில், கொடுமையான குற்றங்களில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, மரண தண்டனை விதிக்கப்படுகிறது. சில நாடுகளில், இத்தண்டனை வழங்கப்படுவதில்லை. இதை அனைத்து நாடுகளும் பின்பற்ற வலியுறுத்தி, அக்.,10ம் தேதி, உலக மரண தண்டனை எதிர்ப்பு தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. 2002 மே.13ல், ரோமில் கூடிய சர்வதேச தொண்டு நிறுவனங்களின் கூட்டத்தில், மரண தண்டனையை ரத்து செய்யவும், மரண தண்டனை எதிர்ப்பு இயக்கத்தை வளர்க்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பின்னர், 2003 அக்.10ம் தேதி, மரண தண்டனை எதிர்ப்பு நாளாக அறிவிக்கப்பட்டது.

செய்யாத குற்றம், மொழி புரியாததால் அடைந்த தண்டனை, ஆராயப்படாத நீதி, மூளை வளர்ச்சி இல்லாதவர் செய்த குற்றம், சிறுவயதில் செய்த குற்றம் ஆகியவை காரணமாக, உலகில் ஐந்து பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. நீதி இல்லாமல் அநீதியாக 5 பேர் மரண தண்டனை பெற்றனர். இனி இதுபோல் நடக்காமல் இருக்க, மரண தண்டனையை உலக நாடுகள் ரத்து செய்ய வேண்டும் என, மரண தண்டனை எதிர்ப்புக் குழுவினர் கோரிக்கை வைக்கின்றனர். மரண தண்டனை என்பது, எந்த ஒரு குற்றத்திற்கும் சரியான தீர்ப்பாக அமையாது என்பதை அனைவரும் உணர வேண்டும்.

Exit mobile version