ஒடிசாவில் நடைபெற்று வரும் உலகக் கோப்பை ஹாக்கி தொடர்: இந்தியா-பெல்ஜியம் அணிகள் இன்று மோதல்

உலகக் கோப்பை ஹாக்கி தொடரில், இன்று நடைபெற உள்ள போட்டியில் இந்தியா-பெல்ஜியம் அணிகள் மோத உள்ளன.

உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிகள் ஒடிசா தலைநகர் புவனேஷ்வரில் நடைபெற்று வருகிறது. இதில், இந்தியா, கனடா, தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் உள்ளிட்ட அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன. ‘சி’ பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, தனது முதல் ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணியை 5 க்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வீழ்த்தி வெற்றி பெற்றது.

இந்நிலையில், இந்தியா- பெல்ஜியம் அணிகள் மோதும் இரண்டாவது போட்டி இன்று இரவு 7 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த போட்டியிலும் இந்திய அணி வெற்றி பெற்றும் முனைப்பில் உள்ளது. இதனால் இந்த போட்டி ரசிகர்களிடையே அதிக ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

Exit mobile version