உலககோப்பை ஹாக்கி : காலிறுதி சுற்றுக்கு தகுதிபெறுமா இந்தியா?

14-வது உலக கோப்பை ஹாக்கிப்போட்டி ஒடிசா தலைநகர் புவனேஸ்வரத்தில் நடைபெற்று வருகிறது. 16 நாடுகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் இந்திய அணி ‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ளது. அந்த பிரிவில் தென்ஆப்பிரிக்கா, பெல்ஜியம், கனடா ஆகிய அணிகளும் இடம் பெற்றுள்ளன.

முதல் லீக் ஆட்டத்தில் இந்திய அணி தென்ஆப்பிரிக்காவை 5-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது. 2-வது ஆட்டத்தில் பெல்ஜியத்துடன் 2-2 என்ற கோல் கணக்கில் ‘டிரா’ செய்தது.

இந்நிலையில் இன்று நடைபெறவுள்ள கடைசி லீக் போட்டியில் இந்திய அணி கனடாவுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறுவதன் மூலம் இந்திய அணி நேரடியாக காலிறுதி சுற்றுக்கு தகுதிபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version