உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவை வீழ்த்தி ஓமன் வெற்றி

22வது உலக கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியாவை 2-1 என்ற கணக்கில் வீழ்த்தி ஓமன் வெற்றி பெற்றது

22வது உலக கோப்பை கால்பந்து போட்டி 2022ம் ஆண்டு கத்தாரில் நடக்கிறது. இந்த போட்டிக்கான ஆசிய கண்டத்துக்கான தகுதி சுற்று பல்வேறு நாடுகளில் நடந்து வருகிறது. இந்த தகுதி சுற்றின் 3வது ரவுண்டில் 40 அணிகள் இடம் பெற்றுள்ளன. இதில் இந்திய அணி இ பிரிவில் ஓமன், வங்காளதேசம், ஆப்கானிஸ்தான், கத்தார் ஆகிய அணிகளுடன் அங்கம் வகிக்கிறது.

இந்நிலையில் தரவரிசையில் 103வது இடத்தில் உள்ள இந்திய அணி, தனது முதலாவது லீக்கில் 87ம் நிலை அணியான ஓமனை கவுகாத்தியில் நேற்றிரவு எதிர்கொண்டது. 24வது நிமிடத்தில் முதல் பாதியில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது.தொடர்ந்து 89வது நிமிடத்தில் இந்திய தடுப்பாட்டக்காரர்களை ஏமாற்றி மீண்டும் அவர் ஒரு கோல் திணித்து இந்திய வீரர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். முடிவில் ஓமன் 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தியது.

Exit mobile version