உலக கோப்பை கிரிக்கெட்டில் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணி நிதானமாக பேட்டிங் செய்து வருகிறது. லண்டன் லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற்று வரும், இறுதிப்போட்டியில் நியூசிலாந்து – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தி வருகின்றன. டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்தது.
இதையடுத்து களமிறங்கிய அந்த அணியில், தொடக்க ஆட்டக்காரர் மார்டின் குப்டில் 19 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தற்போது 29.4 ஒவர்களில் 3 விக்கெட் இழந்த நிலையில், நியூசிலாந்து அணி 125 ரன்கள் எடுத்து விளையாடி வருகிறது.