உலககோப்பை கிரிக்கெட்: வங்கதேசம்-இலங்கை அணிகள் இன்று மோதல்

உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் 16வது லீக் போட்டியில் இன்று வங்கதேசம் மற்றும் இலங்கை அணிகள் இன்று மோதுகின்றன.

ப்ரிஸ்டல் கவுண்டி மைதானத்தில் பிற்பகல் 3 மணிக்கு இந்த ஆட்டம் நடைபெற உள்ளது. மோர்டசா தலைமையிலான வங்கதேச அணி தனது முதலாவது லீக் ஆட்டத்தில் தென் ஆப்ரிக்காவை 21 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. ஆனால் அடுத்த நியூசிலாந்திடமும் இங்கிலாந்திடமும் படுதோல்வி அடைந்தது. இதனால் அந்த அணிக்கு உடனடியாக வெற்றி தேவைப்படும் நிலையில் இலங்கையை இன்று சந்திக்கிறது.

கருணாரத்னே தலைமையிலான இலங்கை அணி, தனது முதல் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியிடம் 10 விக்கெட் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. இரண்டாவது போட்டியில் ஆப்கானிஸ்தானை 34 ரன்கள் வித்தியாசத்தில் வென்றிருந்தது. பாகிஸ்தானுக்கு எதிரான 3வது லீக் போட்டி ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது. வங்கதேசம் தனது முதல் ஆட்டத்தில் வலிமையான தென்ஆப்ரிக்காவை வென்றுள்ளதால் இலங்கையை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள இருக்கிறது.

Exit mobile version