உலககோப்பை கிரிக்கெட்: அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்த ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கிடையிலான போட்டியில் டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.

இங்கிலாந்தில் நடைபெற்று வரும் உலககோப்பை போட்டிகளில், இன்றைய லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் மற்றும் நடப்பு சாம்பியன் ஆஸ்திரேலியாவும் மோதுகின்றன. இந்தப் போட்டியில், ஆஸ்திரேலியா அணி பேட்டிங்கை தொடங்கியது. ஆனால்  மேற்கிந்திய தீவுகள்  அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலியாவின் விக்கெட்டுகள் அடுத்தடுத்து சரிந்தன. தொடக்க ஆட்டக்காரர்கள் வார்னர் 3 ரன்களிலும், பின்ச் 6 ரன்களிலும், கவாஜா 13 ரன்களிலும், மேக்ஸ்வெல் ரன் எதும் எடுக்காமல் இழந்தனர். 10 ஓவர்கள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 50 ரன்கள் எடுத்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் அணி தரப்பில் காட்ரெல் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Exit mobile version