செயற்கைகோள் தொழில்நுட்பத்தில் இந்தியாவை பின்பற்ற உலக நாடுகள் முயற்சிப்பதாக, விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை தெரிவித்துள்ளார். ஈரோடு மாவட்டத்தின் சத்தியமங்கலத்தில் தனியார் பள்ளி நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்தியாவில் மாணவர்களும் செயற்கைக்கோள்களை தயாரிக்க கூடிய சூழல் உருவாகியிருப்பதாவும், தனியார் நிறுவனங்கள் செயற்கைக்கோள் மற்றும் ஏவுகணைகள் தயாரிக்க அனுமதிப்பதன் மூலம் எதிர்காலத்தில் இத்துறையில் வேலைவாய்ப்பு அதிகரிக்கும் எனவும் கூறினார்.
மாணவர்கள் படிப்பதையும் தாண்டி தொழில் செய்ய கற்றுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்திய மயில்சாமி அண்ணாதுரை, பள்ளிகளில் கொண்டு வரப்பட்டுள்ள அடல் டிங்கரிங் சோதனைக் கூடங்களால் இது சாத்தியப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.