உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் இந்தியாவின் பி.வி.சிந்து சீன வீராங்கனையை வீழ்த்தி மூன்றாவது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறி அசத்தியுள்ளார்.
25-வது உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி சுவிட்சர்லாந்தின் பாசெல் நகரில் நடைபெற்று வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடந்த அரையிறுதி போட்டியில், இந்தியாவின் பி.வி.சிந்து தரவரிசையில் 3 ஆம் நிலை வீராங்கனையான சீனாவின் சென் யூ ஃபெய்யை எதிர்கொண்டார். 40 நிமிடம் நடந்த இப்போட்டியில் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய சிந்து 21- 7 மற்றும் 21-14 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்ற சிந்து இறுதி போட்டிக்கு முன்னேறினார். இதன் மூலம் 3 வது முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறிய சிந்து சாதனை படைத்துள்ளார். ஏற்கனவே பதக்கத்தை உறுதி செய்துள்ள சிந்து, உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் தொடரில் 2 வெண்கலம் மற்றும் 2 வெள்ளி பதக்கங்களை வென்றுள்ள நிலையில், முதல் முறையாக தங்கப்பதக்கத்தை கைப்பற்ற தீவிரம் காட்டி வருகிறார். அதேபோல், ஆண்கள் ஒற்றயை பிரிவில் இந்திய வீரரான சாய் பிரணீத் அரையிறுதியில் தோல்வியடைந்ததன் மூலம் வெண்கலப்பதக்கத்தோடு வெளியேறியது குறிப்பிடத்தக்கது.