உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள் கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று தொடங்க உள்ள நிலையில், இந்தியாவிலிருந்து 27 வீரர் வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர்.
17வது உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகள், கத்தார் தலைநகர் தோஹாவில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது. அக்டோபர் 6 ஆம் தேதி வரை நடைபெறும் இப்போட்டிகளில், 209 நாடுகளைச் சேர்ந்த, சுமார் 2 ஆயிரம் வீரர், வீராங்கனைகள் பங்கேற்க உள்ளனர். இதில், இந்தியாவை சேர்ந்த ஹிமா தாஸ், நீரஜ் சோப்ரா, தேஜஸ்வின் சங்கர் உள்ளிட்ட முன்னணி வீரர்கள், காயம் காரணமாக விலகியுள்ள நிலையில், 27 வீரர், வீராங்கனைகளுடன் இந்தியா களம் இறங்க உள்ளது. முதல் நாளில் நடைபெறும் நீளம் தாண்டுதலில், ஸ்ரீசங்கரும், 400 மீட்டர் தடை ஓட்டத்தில் தருண் அய்யாசாமி, மடாரி பில்யாலி ஆகியோரும் கலந்து கொள்ள உள்ளனர். உலக தடகள சாம்பியன்ஷிப் வரலாற்றில், இந்தியா இதுவரை ஒரே ஒரு வெணகல பதக்கம் மட்டுமே வென்றுள்ள நிலையில், இந்த முறையாவது இந்தியா பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே ரசிகர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.