உலக எய்ட்ஸ் தினத்தை முன்னிட்டு ஒரிஷா கடற்கரையில் சிவப்பு நிறத்தில் மணல் சிற்பம் அமைத்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
உலக அளவில் குணப்படுத்த முடியாத நோயாக எய்ட்ஸ் சவால்விட்டு வருகிறது. மருந்துகள் கண்டுபிடிப்பில் ஆய்வறிஞர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், எய்ட்ஸை கட்டுப்படுத்தும் வகையில், ஒரிஷா மாநிலம் கோனார்க் கடற்கரையில் மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. அதை அங்கு வரும் பயணிகள் ஏராளமானோர் பார்த்து ரசிப்பதோடு, எய்ட்ஸ் கட்டுப்பாடு தொடர்பான விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேபோன்று, ஒரிஷாவில் உள்ள பூரி கடற்கரையில் பிரமாண்ட மணல் சிற்பம் அமைக்கப்பட்டுள்ளது. எய்ஸ்ட் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள சிற்பத்தை பொதுமக்கள் கண்டு களித்து வருகின்றனர்.