மார்பக புற்றுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் 450 மீட்டர் நீளத்திற்கு கூந்தலை சடை பின்னும் நிகழ்ச்சி நடைபெற்றது
இந்த உலக சாதனை முயற்சியில்தனியார் அழகு கலை பயிற்சி மையங்களில் பயின்றுவரும்77 அழகு கலை நிபுணர்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தின் பாரம்பரியமாக விளங்கிவரும் நீண்ட கூந்தல் அடையாளத்தைக்கொண்டு பிங்க் நிற செயற்கை இழை சிகையை சடைப்பின்னி சாதனை படைத்தனர். இதில் 450 மீட்டர் நீளத்திற்கு சடைப்பின்னி சாதனை படைத்தனர்.இதன் மூலம் இதற்கு முன்னர் இருந்த 361 மீட்டர் சாதனை முறியடிக்கப்பட்டது. இந்த நிகழ்வு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.இந்த உலக சாதனையை அங்கிகரிக்கும் வகையில் கின்னஸ் நிறுவனம் விரைவில் பாராட்டுச் சான்றிதழை வழங்கவுள்ளது.