தஞ்சாவூரில் நீர் நிலைகள் தூர்வாரும் பணி

கல்லணை கால்வாய் பாசனத்திற்காக தண்ணீர் திறக்க உள்ளன. எனவே அப்பகுதியில் உள்ள விவசாய பாசன வாய்க்கால்கள், வடிகால் வாய்க்கால்கள் குளங்கள், மற்றும் குட்டைகளை தூர்வாரும் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என தமிழக அரசின் உத்தரவின் படி தூர்வாரும் பணி வேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

தஞ்சை மாவட்டம் மாணாங்கோரை கிராமத்தில் உள்ள குளத்தில் முதலமைச்சரின் குடிமராமத்து திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கப்பட்டு குளம் தூர்வாரப்பட்டு வருகிறது. இதனால் அப்பகுதி மக்கள் கோடை காலங்களிலும் நிலத்தடி நீர் குறையாமல் பாதுகாக்க முடியும் என மகிழ்ச்சியுடன் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர்.

Exit mobile version