கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. குறிப்பாக தேநீர் கடைகள், உணவகங்கள் குறிப்பிட்ட நேரங்களில் இயங்கவும், இரவு நேர ஊரடங்கு, ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும் அமல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழ்நாட்டில் வசிக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு திரும்பி செல்கினறனர். இந்த நிலையில், இன்று மாலை 7 மணிக்கு புரட்சி தலைவர் எம்ஜிஆர் மத்திய ரயில் நிலையத்தில் இருந்து புறப்படும் ஹவுரா ரயிலில் செல்ல முன்பதிவு செய்வதற்காக வடமாநிலத்தவர்கள் காலையிலேயே ரயில் நிலையத்தில் குவிந்தனர்.