தொழிலாளரின் வருங்கால வைப்பு நிதியில் அவர்களின் பங்களிப்பை கணக்கிடும் போது முதலாளிகளின் சிறப்பு சலுகைகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டுமென, உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி விதிமுறைப்படி ஊழியர்கள் தங்கள் சம்பளத்தில் 12 சதவிகிதம் வைப்பு நிதியாக அளிக்கின்றனர். இதே பங்களிப்பை முதலாளிகளும் செய்கின்றனர். ஓய்வு பெற்றவர்கள், சிறப்பு படிகள், பயணக் கொடுப்பளவு போன்றவையும் இதில் அடங்கி உள்ளன. இந்தநிலையில், ஒரு ஊழியரின் வைப்பு நிதியை கணக்கிடும்போது முதலாளிகள் சிறப்பு சலுகைகளை கணக்கில் எடுத்து கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 30 ஆயிரம் சம்பளம் பெறும் ஒருவர் கணக்கில் இருந்து 3 ஆயிரத்து 600 ரூபாய் பிடித்தம் செய்து வழங்கப்படும். வைப்பு நிதியானது ஒட்டு மொத்தமாக ஊழியர் பங்களிப்பு ஆயிரத்து 800 ரூபாய் மற்றும் முதலாளி பங்களிப்பு ஆயிரத்து 800 ரூபாய் வீதம் மாதம் 3 ஆயிரத்து 600 ரூபாய் கணக்கில் பிடித்தம் செய்து வழங்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.