விழுப்புரத்தை சேர்ந்த தொழிலாளர்கள் ஊரடங்கு உத்தரவால் சொந்த ஊர் திரும்ப முடியாமல் தவிப்பு!

திருவள்ளூரில் இருந்து விழுப்புரத்திற்கு நடைபயணமாக சென்ற 13 குடும்பங்களை சேர்ந்தவர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தி மண்டபத்தில் தங்க வைத்தனர்.

விழுப்புரம் மாவட்டம் அழகு பெருமாள் குப்பத்தை சேர்ந்த 13 குடும்பத்தினர், திருவள்ளூர் பகுதியில் கட்டட வேலை செய்து வந்துள்ளனர். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதால் சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவிந்து வந்த அவர்கள், திருவள்ளூரில் இருந்து நடைபயணமாக சென்றுள்ளனர். வந்தவாசி அருகே சென்று கொண்டிருந்த போது காவல்துறையினர், அவர்களை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். இதில், பல கிலோ மீட்டர் தூரம் அவர்கள் நடந்து வந்தது தெரிய வந்தது. இதையடுத்து வட்டாட்சியர் உத்தரவின் பேரில் அவர்கள் மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

 

Exit mobile version