திருப்பூரில் ஆன்லைன் மூலம் உணவுகளை விநியோகம் செய்யும் ஊழியர்கள் போராட்டம்

திருப்பூரில் ஆன்லைன் மூலம் உணவுகளை விநியோகம் செய்யும் தனியார் நிறுவன ஊழியர்கள் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்

திருப்பூரில் பிரபல ஆன்லைன் உணவு விநியோக நிறுவனத்தில், பணிபுரியும் ஊழியர்கள், திருப்பூர் – பல்லடம் சாலையிலுள்ள அந்நிறுவன அலுவலகத்தில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அண்மைக்காலமாக,20 ரூபாயாக வழங்கப்பட்ட உணவு விநியோகத் தொகை, தற்போது குறைக்கப்பட்டு 5 ரூபாயாக வழங்கப்படுவதே, அவர்களின் இந்த போராட்டத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது. இதனையடுத்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த திருப்பூர் தெற்கு காவல்துறையினர், மேலாளர் மற்றும் ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனை ஏற்றுக்கொள்ளாத ஊழியர்கள் உரிய முடிவு தெரியும் வரை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக தெரிவித்தனர்.

Exit mobile version