விருதுநகரில் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் தொழிலாளி ஒருவர் பலி

முண்டாலபுரத்தில் தனியார் பட்டாசு ஆலையில் இன்று காலை எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டது. தயாரித்து வைக்கப்பட்டிருந்த பேன்சி ரக பட்டாசுகளை காய வைக்கும் பணிகளில் 5 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது பட்டாசுகளிடையே உராய்வு ஏற்பட்டு வெடி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

இதில் ஆலையில் இருந்த 5 அறைகள் முற்றிலுமாக இடிந்து விழுந்தது. இந்த விபத்தில் ஆலையில் பணியிலிருந்த தொழிலாளி மதியழகன் உடல் பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்ற இடங்களுக்கு பரவுவதற்குள் தீயை அணைத்தனர். விபத்து குறித்து ஆமத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Exit mobile version