நாமக்கல் மாவட்டத்தில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்

நாமக்கல் மாவட்டம் பொத்தனூருக்கு உட்பட்ட பகுதிகளில் 5 கோடியே 18 லட்சம் ரூபாய் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிகளை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, மார்ச்-5ம் தேதி சேந்தமங்கலத்தில் அரசு கலை அறிவியல் கல்லூரிக்கு கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைக்கவுள்ளதாகவும், அந்த நிகழ்ச்சியின் போது 20 ஆயிரம் பேருக்கு அவர் நலத்திட்ட உதவிகளை வழங்கவுள்ளதாகவும்   கூறினார். தமிழகத்தில் சிறுபான்மையினர் ஒருவர்கூட பாதிக்கப்படக் கூடாது என்பதில் அதிமுக அரசு தெளிவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளதாகக் கூறிய அமைச்சர் தங்கமணி, குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து எதிர்கட்சிகள் அரசியல் செய்து வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

Exit mobile version