15 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படும் அதிசய வால் நட்சத்திரம்

15 ஆண்டுகளுக்கு பிறகு காணப்படும் அதிசய வால் நட்சத்திரத்தை பொதுமக்கள் வெறும் கண்ணால் பார்த்து ரசிக்கலாம் என வானிலை ஆராய்ச்சியாளர் தெரிவித்துள்ளார்.

” 46 பி ” விர்ட்டியன் என்ற வால்நட்சத்திரம் ஞாயிறு, திங்கள் கிழமைகளில் பூமிக்கு மிக அருகில் பயணிக்கும் என்றும், இதனை பொதுமக்கள் வெறும் கண்களால் பார்த்து ரசிக்கலாம் என்றும் திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் அமைந்துள்ள வான் இயற்பியல் ஆய்வக ஆராய்ச்சியாளர் செல்வேந்திரன் கூறியுள்ளார். வடகிழக்கு திசையில் நீலவண்ணத்தில் சுடர் விட்டு நகரும் இந்த வால் நட்சத்திரத்தை இரவு 7 முதல் 9 மணிவரை தெளிவாக பார்க்கலாம். 15 ஆண்டுகளுக்கு ஒருமுறைதான் இது போன்ற வால்நட்சத்திரத்தை காண முடியும்.

 

Exit mobile version