அஸ்திவாரம் இல்லாத அதிசய வீடு – 11 ஆண்டுகளை கடந்தும் குறையாத கம்பீரம்!

11 ஆண்டுகளை கடந்தும் கம்பீரமாக நிற்கிறது, அஸ்திவாரம் இல்லாமல் கட்டப்பட்ட மாடி வீடு, எப்படி கட்டப்பட்டது இந்த அதிசய வீடு?… ஆச்சர்யமூட்டும் தகவல்களுடன் ஒரு சிறப்பு தொகுப்பு உங்களுக்காக…

 

ராமநாதபுரம் அருகே திருபுல்லாணியை அடுத்த மேலப்புதுக்குடியைச் சோந்தவர் சாகுல் அமீது. 20 ஆண்டுகளுக்கும் மேலாக சவுதி அரேபியாவில் கட்டுமான நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்தார். 5-ம் வகுப்பு வரை மட்டுமே படித்த இவர், கட்டுமானப் பணி அனுபவங்களைக் கொண்டு வித்தியாசமான வீட்டை கட்ட திட்டமிட்டார். அதன்படி நிலத்திற்கு அடியில் தூண்கள் அமைக்காமல், தரைத்தளம் அமைத்து அதற்குமேல், தூண்களை நிறுத்தி, 2 தளங்களுடன் கூடிய அதிசய வீட்டை கட்டியுள்ளார்.

கடந்த 22 ஆண்டுகளாக கட்டடங்களுக்கு கான்கிரிட் பம்ப் ஆப்ரேட்டராக, வளைகுடா நாடுகளில் வேலை செய்துள்ள சாகுல் அமீது. குஜராத், நேபாளம் உள்ளிட்ட பகுதிகளில் ஏற்பட்ட நிலநடுக்கம்,
இயற்கை பேரழிவுகளால் உருக்குலைந்த வீடுகளை கண்ட தமக்கு, அஸ்திவாரம் இல்லாத வீட்டினை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் தோன்றியதாக கூறுகிறார்.

மேலும் இந்த வீட்டின் சிறப்பம்சமாக கட்டடத்தின் தரையில் இருந்து 1 மீட்டருக்கு அடியில் தொழில்நுட்ப உதவியுடன் சுழலும் உருளை சிலிண்டர்களை வைத்து, அதன் மூலம் 360 டிகிரியில் எந்தப்பகுதியிலும் திருப்பிக் கொள்ளலாம் என்றும், தேவைப்பட்டால் பல அடி தூரம் வரை வீட்டை தள்ளிவைத்துக் முடியும் என்றும் வீட்டின் உரிமையாளர் சாகுல் அமீது தெரிவித்துள்ளார். கட்டப்பட்டு 11 ஆண்டுகளாகியும் இன்றும் புதுப்பொலிவுடன் திகழும் இந்த அஸ்திவாரம் இல்லாத மாடி வீட்டை மக்கள் ஆச்சர்யத்துடன் பார்த்துசெல்கின்றனர்.

Exit mobile version