பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டி- இன்று பாகிஸ்தானை எதிர்கொள்ளும் இந்திய அணி

பெண்களுக்கான உலக கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர்கொள்கிறது.

பெண்களுக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மேற்கிந்திய தீவில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் நடைபெற்ற முதலாவது லீக் ஆட்டத்தில் நியூஸிலாந்தை எதிர்கொண்ட இந்திய அணி 34 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் 51 பந்தில் 8 சிக்சர் உட்பட 103 ரன் அடித்து சாதனை படைத்தார்.

இந்நிலையில், இந்திய அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தானை இன்று எதிர் கொள்கிறது. ப்ரொவிடன்ஸில் நடைபெறும் இப்போட்டி இன்று இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. ஏ பிரிவில் நடைபெறும் மற்றொரு லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து அணி இலங்கையை எதிர் கொள்கிறது.

 

Exit mobile version