மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் லீக் போட்டியில், தாய்லாந்து அணியை 113 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தென்ஆப்பிரிக்க அணி அபார வெற்றி பெற்றது.
மகளிர் 20 ஓவர் உலக கோப்பை தொடர் ஆஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்ற முதல் லீக் போட்டியில் தென்ஆப்பிரிக்கா – தாய்லாந்து அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற தென்ஆப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்தது. தென்ஆப்பிரிக்க அணியில் தொடக்க வீராங்கனை லீசெல்லா லீ, முதல் சதத்தை பூர்த்தி செய்த நிலையில், 101 ரன் எடுத்து ஆட்டமிழந்தார். 20 ஓவர் போட்டியில் அதிக ரன் குவித்த தென்ஆப்பிரிக்கா வீராங்கனை என்ற சாதனையையும் அவர் படைத்தார். சன்னே லுயஸ் 61 ரன் எடுத்தார். தென்ஆப்பிரிக்க அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன் குவித்தது. இதன் மூலம் மகளிர் 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த சாதனையை தென் ஆப்பிரிக்க அணி படைத்தது.