மகளிர் 20 ஓவர் உலக கோப்பை -ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்ளும் இந்தியா

மகளிர் 20 ஓவர் உலக கோப்பை தொடரில் இந்தியா தனது கடைசி லீக் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது.

மகளிருக்கான 20 ஓவர் உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் மேற்கிந்திய தீவுகளில் நடைபெற்று வருகிறது. இதில் பி பிரிவில் இடம்பெற்றுள்ள இந்திய அணி, நியூஸிலாந்து, பாகிஸ்தான் மற்றும் அயர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றது.

இந்த நிலையில், தனது கடைசி லீக் போட்டியில் தனது பிரிவில் முதலிடத்தில் உள்ள ஆஸ்திரேலியாவை இன்று எதிர்கொள்கிறது. ப்ரொவிடன்ஸில் நடைபெறும் இப்போட்டி இந்திய நேரப்படி இரவு 8.30 மணிக்கு தொடங்குகிறது. இந்த தொடரில் தோல்வியை சந்திக்காத இரு அணிகளும் மோதுவதால் இப்போட்டி ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது

Exit mobile version