வயல் வெளியில் வைத்து பிரசவம் பார்த்த பெண்கள்

ஆம்பூர் அருகே பிரசவ வலியால் துடித்த பெண்ணுக்கு, வயல்வெளியில் வேலை செய்த பெண்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பத்தூர் மாவட்டம்  ஆம்பூரை அடுத்த கீழ் மிட்டாளம் பகுதியை சேர்ந்த சிலம்பரசன் என்பவரின் மனைவி சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் நரியம்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சோனியாவை அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது அவருக்கு பிரசவ வலி அதிகமானதால் ஆம்புலன்ஸ் அங்கேயே நிறுத்தப்பட்டது. இதனைக் கண்டு அப்பகுதியில் உள்ள வயல்வெளியில் வேலை செய்து கொண்டிருந்த பெண்கள், சோனியாவை ஆம்புலன்ஸில் இருந்து கீழே இறக்கி, அவரைச் சுற்றிலும் அரனாக புடவைகளை பிடித்து  பிரசவம் பார்த்துள்ளனர். இதில் அவருக்கு  பெண் குழந்தை பிறந்ததை அடுத்து தற்போது தாயும் சேயும் நலமாக உள்ளனர். வலியால் துடித்த பெண்ணுக்கு வயல் வெளியில் வேலை செய்த பெண்கள் பிரசவம் பார்த்த சம்பவம், அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Exit mobile version