தன்னம்பிக்கையை தாரக மந்திரமாக கொண்ட தைரியப் பெண்கள்

ஆண்களுக்கு சலைத்தவர் அல்ல நாங்கள் என்று நிரூபிக்கும் வகையில் கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே சோபா தயாரிக்கும் தொழில் நடத்துகின்றனர் பெண்கள். இதுகுறித்த ஒரு செய்தி தொகுப்பை பார்க்கலாம்…

அரவக்குறிச்சி தென்னிலை அருகே ஆத்திபாளையம் கிராமத்தில் அபி நந்தகுமார் என்பவர் சோபா தயாரிக்கும் நிறுவனம் நடத்தி வருகிறார். ஆத்திப்பாளையம் கிராமத்தில் பெண்கள் வேலைக்கு செல்வது என்றால் 30 கிலோ மீட்டர் சென்று கரூர் செல்லும் நிலை இருப்பதாக தெரிகிறது. ஆனால் கடந்து ஐந்து வருடங்களுக்கு முன்பு னால் அபி நந்தகுமார் என்பவர் தொடங்கிய சோபா தயாரிக்கும் நிறுவனம் வந்ததற்கு பிறகு இந்தநிலை மாறியதாக தெரிகிறது. காரணம் ஆண்கள் மட்டுமே செய்து வந்த சோபா தயாரிக்கும் தொழிலில் இறங்கி தங்களது திறமையை காட்டத் தொடங்கினார்கள் பெண்கள்.

சோபாவின் மர வேலைகளை மட்டும் ஆண்கள் செய்து கொடுக்க அதன் பின் உள்ள அனைத்து வேளைகளையும் தென்னிலை கிராமத்தை சேர்ந்த 20 பெண்கள் செய்து அசத்தி வருகின்றனர். எந்த தொழில் நுணுக்கமும் தெரியாமல் இந்த தொழிலுக்கு வந்த நாங்கள் தற்போது ஆண்களுடன் போட்டி போடும் அளவிற்கு இத்தொழிலில் கைத்தேறியுள்ளோம் என்று தன்னம்பிக்கையோடு செயலாற்றுகிறார்கள் இவர்கள்.

உண்மையில் மகளிர் தினம் கொண்டாட வேண்டிய சாதனை பெண்களின் பட்டியலில் இவர்கள் மிகவும் முக்கியம் வாய்ந்தவர்கள். தன்னிலையை தாமே மாற்ற போராடும் தென்னிலை கிராம மக்களுக்கு நியூஸ் ஜே செய்திகளின் இனிய மகளிர் தின நல்வாழ்த்துக்கள்.

Exit mobile version