தமிழக நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் மூலம் கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டம் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது. ஆலோசனைக் கூட்டத்தில் சென்னை மாநகராட்சி சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும், சுயஉதவிக் குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி வழங்குதல், அம்மா இருசக்கர வாகனத் திட்டம், குளங்கள் மற்றும் குட்டைகள் மேம்படுத்தும் பணிகள் குறித்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கையாக மகளிர் சுயஉதவிக் குழுக்களின் மூலமாக முகக்கவசங்கள் , கிருமி நாசினி மற்றும் கைக்கழுவும் திரவம் தயாரிக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் மேலும் கூடுதலாக குறைந்த விலையில் 1 கோடி முகக்கவசங்கள் தயாரித்து வழங்கவும் கூட்டத்தில் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.
கூட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிகள் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹன்ஸ்ராஜ் வர்மா, நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அரசு கூடுதல் தலைமை செயலாளர் ஹர்மந்தர் சிங், பெருநகர சென்னை மாநகராட்சி ஆணையானார் கோ.பிரகாஷ் , உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.