ஆப்கானிஸ்தானில் புதிய அரசு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை, தாலிபன்கள் இன்று வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆப்கானிஸ்தானில், அரசுப் படைகளுக்கு எதிரான போரில் வெற்றிபெற்று, 20 ஆண்டுகளுக்கு பிறகு தாலிபன்கள் மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளனர்.
இந்நிலையில், புதிய அரசு அமைப்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தாலிபன்கள் இன்று பிற்பகலில் வெளியிட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இஸ்லாமிக் எமிரேட் என்று புதிய அரசுக்கு பெயரிட்டுள்ள தாலிபன்கள், ஆப்கானிஸ்தானின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர்.
கந்தகாரில் உள்ள ராணுவ தளபதியும், மதத் தலைவருமான ஹிபாத்துலா அகுண்ட்ஜ்யாதா, தாலிபன் அரசுக்கு தலைமை வகிக்கும் சுப்ரீம் தலைவர் என்றும், முல்லா பராதார் அதிபராக பதவியேற்க உள்ளார் என்றும் தலிபான்கள் அறிவித்துள்ளனர்.
இதனிடையே, தாலிபன் அமைச்சரவையில் பெண்களுக்கு சம உரிமை வழங்க வலியுறுத்தி, ஹீரட் நகரில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.