திமுகவினரின் பிரசாரத்திற்கு பெண்கள் கடும் எதிர்ப்பு

திமுகவினர் தேர்தல் பிரசாரத்தின் போது, பொள்ளாச்சி பெண்கள் இழிவானவர்கள் என்று கூறியுள்ளதற்கு அப்பகுதி பெண்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை மாவட்டம், பொள்ளாச்சியில், திமுக வேட்பாளரை ஆதரித்து, திமுகவினர் ஆட்டோ மூலம் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பொள்ளாச்சி – ஆழியார் சாலை பகுதியில் பிரசாரத்தில் ஈடுபட்ட அவர்கள், பொள்ளாச்சியில் உள்ள பெண்கள் இழிவானவர்கள் என்று பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அப்பகுதி பெண்கள், திமுகவினரிடம் கேட்டபோது தங்களை ஒருமையில் பேசியதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த பெண்கள், பிரசாரத்தில் ஈடுபடாத வகையில் திமுகவினரை விரட்டியுள்ளனர். இது தொடர்பாக பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில், அவர்கள் புகார் அளித்துள்ளனர்.

Exit mobile version