செல்போனில் பேசிக் கொண்டிருந்த இளம்பெண் ஒருவர், கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரை அடுத்த குட்டகந்தூரை சேர்ந்த வழக்கறிஞர் திருமூர்த்தியின் மனைவி லக்சனா. இவர், நேற்று இரவு வீட்டின் அருகிலுள்ள கிணற்றின் அருகே அமர்ந்து செல்போனில் பேசிக்கொண்டிருந்தார். அப்போது, எதிர்பாராத விதமாக 90 அடி ஆழ கிணற்றில் அவர் தவறி விழுந்துள்ளார். இதுகுறித்து, தகவல் அறிந்த தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் நீண்ட நேரம் போராடி, கிணற்றில் விழுந்த லக்சனாவை சடலமாக மீட்டனர்.
திருமணமாகி 3 ஆண்டுகளே ஆன நிலையில், செல்போனில் பேசிக்கொண்டிருந்த இளம்பெண் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம், அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.