சென்னை அயனாவரத்தில் பெண்ணிடம் இருந்து கைப்பையை பறித்து சென்ற இளம்பெண்ணை பொதுமக்கள் பிடித்து காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர்.
அயனாவரம், பொன்வேல்புரம் 4 வது தெருவை சேர்ந்தவர் ஷர்மிளா. இவர் தனது மகன்களை செல்லியம்மன் கோவில் தெருவில் உள்ள பள்ளியில் இருந்து அழைத்து வந்துள்ளார். அப்போது, ஆண்டர்ஸன் சாலை அருகே ஆட்டோவில் வந்த பெண் சர்மிளாவின் கைப்பையை பறித்துள்ளார். சர்மிளாவின் அலறல் சத்தம் கேட்டு அங்குள்ளவர்கள் ஆட்டோவில் இருந்த இளம் பெண்ணை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். ஆடோவை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஆட்டோ ஓட்டுநரையும், இளம்பெண்ணையும் சிறையில் அடைத்தனர்.