ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட பெண்

மேட்டூரில் குடும்ப தகராறு காரணமாக ஓடும் பேருந்தில் கழுத்தை அறுத்துக் கொண்ட முன்னாள் ராணுவ வீரரின் மனைவி சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் மேட்டூர் அடுத்த தொழிலாளர் இல்லப் பகுதியைச் சேர்ந்த முன்னாள் இராணுவ வீரர் சந்தானத்தின் மனைவி அகல்யா. இவர்களின் மகள் காயத்ரி, கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் அகல்யா மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்று வந்துள்ளார். சேலம் சென்று விட்டு தனியார் பேருந்தில் மேட்டூர் திரும்பிய போது கையில் வைத்திருந்த கத்தியால் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.இதனையடுத்து பயணிகள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Exit mobile version