வாலாஜாபாத்தில் பாம்பு வைத்து அருள்வாக்கு சொன்ன பெண் சாமியார் கைது

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத்தில் பாம்பு வைத்து பூஜை செய்து அருள்வாக்கு சொன்ன பெண் சாமியாரை வனத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

வாலாஜாபாத் வெள்ளரி அம்மன் கோவில் பகுதியை சேர்ந்த கபிலா என்பவர், வட பத்ரகாளி அம்மனுக்கு கோவில் கட்டி அருள்வாக்கு சொல்லி வருகிறார். கடந்த ஆண்டு கோவில் கும்பாபிஷேகத்தின் போது, நல்ல பாம்புகளை வைத்து சர்ப்ப சாந்தி எனப்படும் நாக பூஜை செய்துள்ளார். கோவிலை பிரபலப்படுத்துவதற்காக கழுத்தில் பாம்பை சுற்றி, அருள்வாக்கு கூறி அந்த வீடியோக்களை ஒன்றரை ஆண்டுக்கு பிறகு பெண் சாமியார் கபிலா சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Exit mobile version