நாமக்கல் அருகே காதலியை கொலை செய்த இளைஞருக்கு, ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாமக்கல் மாவட்டம் புதுப்பட்டியை சேர்ந்த அன்பரசன் தனியார் பேருந்தில் நடத்துனராக பணியாற்றி வந்தார். இவர் கரூர் மாவட்டம் வாங்கல் பகுதியை சேர்ந்த பேபி என்ற இளம்பெண்ணை காதலித்து வந்துள்ளார். எனினும் பேபியை திருமணம் செய்யாமல், அன்பரசன் காலம் தாழ்த்தி வந்தார்.
இந்நிலையில் 2018ம் ஆண்டு செப்டம்பர் 12ம் தேதி கீழசக்கரை பாளையம் அருகே இருவரும் சந்தித்து பேசுகையில் ஏற்பட வாக்குவாததில் பேபியை அன்பரசன் கொலை செய்தார்.
இதுகுறித்த வழக்கு கரூர் மகிளா விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதி சசிகலா, அன்பரசனுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார்.