பொழுதுபோக்கிற்காக தொடங்கிய யூ டியூப் கணக்கின் மூலம் தற்போது மாதம் ஒரு லட்சம் ரூபாய் பணம் ஈட்டி வருகிறார் பெண் ஒருவர்..
தனி நபர் யூ-டியூப் சேனல் தற்போது அதிக அளவில் வளர்ச்சி அடைந்து வந்தாலும் பெண்கள் மத்தியில் யூ டியூப் கணக்கானது குறைந்த அளவே வரவேற்பை பெற்றிருப்பதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றனர்.ஆனால் அதனை முறியடிக்கும் விதமாக பெண்கலும் கலத்தில் இறங்கி சாதனை படைத்து வருகின்றனர்.அந்த வகையில் கேரளத்தை சேர்ந்த அன்னி யூஜின் என்ற இளம்பெண் யூ டியூப் மூலம் மாதம் 1 லட்சம் பணம் சம்பாதித்து வருகிறார் .
அன்னி யூஜின் தனது வீட்டில் இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதில் விளையக்கூடிய இயற்கை காய்,பழ வகைகள் அனைத்தையும் படம் பிடித்து தனது யூடியூப்பில் 2015 ஆம் ஆண்டு முதன் முதலாக பதிவேற்றினார் இதனை தொடர்ந்து இவரது யூடியூப் பக்கத்தினை பலரும் விரும்ப அரமித்துள்ளனர்,இதுமட்டுமல்லாமல் பல டிப்ஸ் களும் பதிவேற்றி வருகிறார் அன்னி யூஜின் .தற்போது அன்னி யூஜின்க்கு 6 லட்சத்துக்கும் அதிகமான சந்தாதரர்கள் இருக்கின்றனர், 2 கோடிக்கும் அதிகமாக இவரது யூ டியூப் பக்கத்தினை பார்த்துள்ளனர்.
இது குறித்து அன்னி யூஜின் கூறுகையில் பொதுவாக சமூக வலைத்தளங்களில் நாம் எந்த ஒரு வீடியோ அல்லது புகைப்படத்தை பதிவு செய்தாலும், அதன் வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப விளம்பரம் அளிக்க முன் வருவார்கள். என்னுடைய வீடியோவிற்கு இடையே அவ்வாறு விளம்பரங்கள் ஒளிபரப்பாகின்றன. அதன் மூலம் எனக்கு மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம் கிடைக்கிறது.
என்னுடைய முதல் பதிவிற்கே 8300 பேர் விருப்பம் தெரிவித்திருந்தனர். சாதாரணமாக வீட்டில் உள்ள செடிகளை மட்டும் பதிவுசெய்யாமல் விவசாயம் குறித்த செய்திகள் மற்றும் பூச்சிகள் வராமல் இயற்கை முறையில் பாதுகாப்பது குறித்த செய்தியும் வெளியிடுறேன். இதனால் பெரும்பாலான விவசாயிகள் எனது யூடியூப்பை பார்வையிடுவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர். விவசாயம் மூலம் சம்பாதிக்கிறேனோ இல்லையோ, வீடியோவை பதிவிடுவதன் மூலம் நிரந்தர வருமானம் கிடைக்கிறது’’ என்றார் பெருமையாக கூறுகிறார் அன்னி யூஜின்.