பெண் மருத்துவரால் இப்படி ஒரு செயலை செய்யமுடியுமா?

மேகாலயாவில் பிரசவ வலியில் துடித்த கர்ப்பணிக்காக ஆம்புலன்ஸ் ஓட்டி தாயையும் குழந்தையும் காப்பாற்றிய பெண் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

வடகிழக்கு இந்தியாவின் மலைகள் சூழ் மாநிலம் மேகாலயா. ஹில்ஸ் மாவட்டத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவராக பல்நாம்சி சங்மா பணியாற்றி வருகிறார். இந்த மருத்துவமனையில் கர்ப்பிணிப் பெண் ஒருவர் உடல் நலம் குறைவு காரணமாக அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலைக்கு ஏற்ற சிகிச்சை ஆரம்ப சுகாதார நிலையத்தில் அளிக்க முடியாத நிலையில் , கர்ப்பிணி பெண்ணை வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல வேண்டிய சூழ்நிலை இருந்தது. ஆனால் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் விடுப்பு என்பதால் அந்த பெண் மருத்துவர் தயங்காமல் பிரசவ வலியில் துடித்த கர்ப்பணியை ஆம்புலன்ஸில் ஏற்றி கொண்டு 36 கி.மீ தொலைவில் உள்ள மகப்பேறு மற்றும் குழந்தைகள் நல மருத்துவமனையில் சேர்த்துள்ளார். சரியான நேரத்தில் கர்ப்பிணி பெண்ணை மருத்துவமணையில் அனுமதித்து தாயையும் குழந்தையும் காப்பாற்றிய பெண் மருத்துவருக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

Exit mobile version