சிதம்பரம் நடராஜர் கோவிலில் சாமி கும்பிட சென்ற பெண் மீது தாக்குதல்

சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி கும்பிட வந்த பெண் செவிலியரை தாக்கிய தீட்சிதர் மீது காவல் துறையினர் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்…

சிதம்பரம் வ.உ.சி தெருவை சேர்ந்த லதா என்பவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தலைமை செவிலியராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில், தனது மகனின் பிறந்த நாளை கொண்டாட நடராஜர் கோவிலுக்கு அவர் சாமி கும்பிட சென்றுள்ளார். அப்போது கோவில் பிரகாரத்தில் உள்ள முக்குறுணி விநாயகர் சன்னதியில் அர்ச்சனை செய்ய தேங்காய் மற்றும் பழ தட்டை லதா கொடுத்துள்ளார். ஆனால் தீட்சிதர் வெறும் தேங்காயை உடைத்துவிட்டு அர்ச்சனை செய்யாமல் திருப்பி கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தீட்சிதரிடம் கேட்டதற்கு அவர் லதாவை ஆபாச வார்த்தைகளால் திட்டி கன்னத்தில் அறைந்துள்ளார். இதனால் மயக்கமடைந்த லதா அரசு மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து அளிக்கப்பட்ட புகாரின் பேரில் தீட்சதர் மீது 3 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

 

Exit mobile version