கணவருக்கு சாப்பாட்டில் பேதி மாத்திரை கலந்து கொடுத்த மனைவிகள்

திருப்பூரில் குடிபோதையில் தகராறு செய்து வந்த கணவருக்கு பேதி மருந்து கொடுத்ததால் ஆத்திரமடைந்த, கணவர் தன் மனைவிகளை தாக்கியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். ஏபிடி சாலையில் வசித்து வந்த ரமேஷ் என்பவர் மது போதையில் தனது இரு மனைவிகளுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இதனால் அவரது மனைவிகள் ரமேஷிற்கு சாப்பாட்டில் பேதி மாத்திரையை கலந்து கொடுத்துள்ளனர். இதனை அறிந்து ஆத்திரமடைந்த ரமேஷ் இருவரையும் தாக்கியதில் முதல் மனைவி சம்பவ இடத்திலேயே பலியானார். மற்றொருவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்து ரமேஷ் திருப்பூர் வடக்கு காவல்நிலையத்தில் சரணடைந்தார்.

Exit mobile version