சிதம்பரத்தில் இருந்து உரிய ஆவணங்களின்றி காரில் கொண்டு வரப்பட்ட 2 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கவரிங் நகைகளை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
நாடாளுமன்றத் தேர்தல் ஏப்ரல் 18-ஆம் தேதி நடைபெற இருப்பதை முன்னிட்டு நாகை மாவட்டத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வாகன சோதனை நடத்தி வருகின்ரனர். நாகூர் சோதனைச் சாவடி அருகே கார்த்திகேயன் தலைமையிலான தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே வந்த சொகுசு காரை மறித்து சோதனை செய்த அதிகாரிகள் காரில் இருந்த 2 லட்சத்து 50 அயிரம் ரூபாய் மதிப்பிலான கவரிங் நகைகளை பறிமுதல் செய்தனர்.