எந்த வரியையும் உயர்த்தாமல் ரூ.2 லட்சம் கோடி வரியை மத்திய அரசு தள்ளுபடி -அருண் ஜெட்லி

எந்த வரியையும் உயர்த்தாமல் 2 லட்சம் கோடி ரூபாய் வரியை மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்துள்ளார்.

”மோடி அரசின் கொள்கையால் ஏழைகளும், நடுத்தர மக்களும் அடைந்த பலன்கள்” என்ற தலைப்பில் அருண்ஜெட்லி தனது சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில், கடந்த 5 ஆண்டுகளில் எந்த வரியையும் உயர்த்தாமல் 2 லட்சம் கோடி ரூபாய் வரியை பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தள்ளுபடி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும், மறைமுக வரிகள், ஜி.எஸ்.டி. என்ற பெயரில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், ஜி.எஸ்.டி. வரி குறைப்பால் 1 லட்சம் கோடி அளவுக்கு பொருட்களின் விலை குறைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். வருமான வரி செலுத்துவதில், நேரடியாகவும், மறைமுகமாகவும் ஆண்டுதோறும் சலுகைகள் அளிக்கப்பட்டுவருவதாக தெரிவித்த அருண் ஜெட்லி, ஆண்டுக்கு 97 ஆயிரம் கோடி ரூபாய் அரசுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறியுள்ளார்.

Exit mobile version