கரூர் நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அமமுக வேட்பாளர் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் சென்ற 2 லட்சம் ரூபாய் பணத்தை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
அரவக்குறிச்சி சட்டமன்ற தொகுதியில் நாளை இடைத்தேர்தல் நடைபெறுகிற்து. இந்நிலையில் பணப்பட்டுவாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் ஈடுபட்டுள்ளனர். நொய்யல் சோதனைச் சாவடி அருகே தேர்தல் கண்காணிப்பாளர் ஆனந்த் தலைமையில் சோதனை நடைபெற்றது. அப்போது, அமமுக சார்பில் கரூர் நாடளுமன்ற வேட்பாளராக போட்டியிட்ட தங்கவேல் சென்ற வாகனத்தில் அதிகாரிகள் நடத்திய சோதனையில் உரிய ஆவணங்களின்றி எடுத்து செல்லப்பட்ட 2 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, வேலாயுதம்பாளையம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.